சமுதாயம சார்ந்த கட்டுரை

முற்கால முத்தரையர் - Published on 2012-04-26

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தண்டரம்பட்டில் கிடைத்த இரண்டு நடுகல் கல்வெட்டுகள் பொன்மாந்தனார் என்ற முத்தரைய தலைவனை பற்றி கூறுகின்றன .தமிழ் நாட்டின் வட பகுதியில் உள்ள மேற் கோவலூரை தலை நகர்க கொண்டு இந்த பொன்மாந்தனார் ஆட்சி புரிந்துள்ளார் .இந்த பொன்மாந்தனார் ,முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் சம காலத்தவன் என்பதும் கல்வெட்டுகளால் புலனாகிறது .தொண்டை மண்டலத்திலுள்ள செங்கம் பகுதி இவனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .இக்குறு நிலா மன்னன் தமது அண்ணன் மகனான வானகோ முத்தரையர் என்பவரால் போரில் தோற்கடிக்கப்பட்டதாக தெரிகிறது .பல்லவ முதலாம் நரசிம்ம வர்மனின் ஏழாம் ஆட்சியாண்டில் வானகோ முத்தரையர் ,பொன்மாந்தரையரை தாக்கியுளதால் இவனது ஆட்சியாண்டு கி .பி 637 இல் முடிவுற்றதாக கருதலாம் .இவனது ஆட்சி கி.பி.630 முதல் 637 முடிய நீடித்ததாக ஊகிக்கலாம்.

நன்றி
மனோகர் - நாகை மாவட்டம்