முத்தரையர் வரலாறு

தற்காலத்திய திருச்சி ,தஞ்சை ,புதுகோட்டை மாவட்டங்களில் பெரும் பகுதிகளை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர் .இவர்களது நாடு முத்தரையர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறுகின்றது .திருக்காட்டு பள்ளி அருகில் உள்ள செந்தலை அல்லது ஐம்பது கல் நகரம் இவர்களது தலை நகரமாகும் .இப்பொழுது ஐம்பது கல் நகரம் அம்பி நாரம் என்று அழைக்கப்படுகிறது .செந்தலைக்கு அருகில் உள்ள நாகத்தி ,உமையவள் ஆற்காடு ,வல்லம் ,தஞ்சை ,முதலிய பகுதிகள் முதராவ்யரின் தலை நகரத்தில் அடங்கி இருந்ததாக தெரிகிறது திருகாட்டு பள்ளி நியமம் ,விஷ்ணம்பேட்டை,இளங்காடு கூடநாணல் கூழாக்கி ஆற்காடு ,விண்ணமங்கலம் ,பொன்விளைந்தான் பட்டி ஆகிய பகுதிகளும் செந்தலையை சார்ந்திருந்தன .செந்தலைக்கு சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் வழங்கியது ,தஞ்சை ,வல்லம் முத்தரையர்களது தலைமை நகரங்களாக சில காலம் இருந்தன.

முற்கால முத்தரையர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தண்டரம்பட்டில் கிடைத்த இரண்டு நடுகல் கல்வெட்டுகள் பொன்மாந்தனார் என்ற முத்தரைய தலைவனை பற்றி கூறுகின்றன .தமிழ் நாட்டின் வட பகுதியில் உள்ள மேற் கோவலூரை தலை நகர்க கொண்டு இந்த பொன்மாந்தனார் ஆட்சி புரிந்துள்ளார் .இந்த பொன்மாந்தனார் ,முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் சம காலத்தவன் என்பதும் கல்வெட்டுகளால் புலனாகிறது .தொண்டை மண்டலத்திலுள்ள செங்கம் பகுதி இவனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .இக்குறு நிலா மன்னன் தமது அண்ணன் மகனான வானகோ முத்தரையர் என்பவரால் போரில் தோற்கடிக்கப்பட்டதாக தெரிகிறது .பல்லவ முதலாம் நரசிம்ம வர்மனின் ஏழாம் ஆட்சியாண்டில் வானகோ முத்தரையர் ,பொன்மாந்தரையரை தாக்கியுளதால் இவனது ஆட்சியாண்டு கி .பி 637 இல் முடிவுற்றதாக கருதலாம் .இவனது ஆட்சி கி.பி.630 முதல் 637 முடிய நீடித்ததாக ஊகிக்கலாம்.

வாணகோ முத்தரைசர்

வாணகோ முத்தரைசர்,பொன்மாந்தணாரை அடுத்து மேற் கோவலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியுனை ஆண்டு வந்ததாக தெரிகிறது. இவன் பொன்மாந்தநாரை வென்று கி .பி 737 -இல் ஆட்சியை கைப்பற்றினான் என்பதனை "மேற் கோவலூர் மேல் வந்து தஞ்சிற்ற படிகளை எறிந்த ஞான்று ",என்னும் கல்வெட்டு தொடரால் அறியாலாம்.

வாணகோ முத்தரைசன் முதலாம் நரசிமனின் காலத்திணன் ஆவான். மாந்த பருமர் ;வாணகோ முத்தரைசரை அடுத்து மாந்த பருமர் ஆட்சிக்கு வந்தார் .மாந்த பருமர் என்னும் பெயரை கொண்டு இவன் பொன் மாந்தனாரின் மகனாகவே இருத்தல் வேண்டும் மென்று தோன்றுகிறது .தனது தந்தையை கொன்று ஆட்சியை கைப்பற்றிய வாணகோ முத்தரைசரை வென்று பழியை தீர்த்துகொண்டான் ,இவன் புகழ் மிக்க மண்ணாக திகழ்ந்தான்.

சான்றுகள்

செங்கம் பகுதியில் அமைந்துள்ள கடலாடியுளும் மேல்புன்செயலும், தருமபுரி மாவட்டம் கொளத்துரிலும் காணப்பெறும் நடுகல், கல்வெட்டுகள் இம்மனன்னை பற்றி அறிந்துகொள்ள பயன் படுகின்றன .மேற்கூற்றை கல்வெட்டுகள் ஆய்ந்து பார்க்கும்போது இவர் எந்த அரசனுக்கும் உட்படாது தனித்தாண்ட பேரு வேந்தனாக தெரிகிறது .கொங்கணி அரசரும் கங்காமன்னரும் இவனது மேலாண்மையை ஏற்றுகொண்டனர் . இவ்வேந்தனது 22 வது ஆட்சியாண்டு கல்வெட்டு கிடைத்துள்ளதால் இவன் 22 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்பது திண்ணம் .அதாவது கி .பி .642 முதல் 664 வரை நீடித்ததாக கொள்ளலாம் . தொண்டை மண்டல பகுதியுலும் தமிழகத்தின் வட எல்லையும் மைசூர் நாட்டின் தென் எல்லையும் அடங்கிய பகுதியிலும் ஆட்சி புரிந்தான் இம் முத்தரைய மன்னனை முற்கால முத்தரையர் என்றும் தொண்டை முத்தரையர் என்றும் அழைக்கலாம் .சோழ மண்டல பகுதியில் ஆண்ட முத்தரையரை பிற்கால முத்தரையர் என்றும் பேரு முத்தரையர் என்றும் கூறலாம்.

பிற்கால முத்தரையர்கள்

தொண்டை மண்டலத்தின் தென் பகுதியை ஆண்டு வந்த முத்தரையரை காட்டிலும் ,தஞ்சை பகுதியை ஆண்ட பிற்கால முத்தரையர் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர் .பிற்கால முத்தரையரை பற்றி அறிந்து கொள்வதரக்குச் சில சான்றுகள் கிடைத்துள்ளாதால் அவர்களது ஆட்சி பற்றியும் போர் நடவடிக்கைகள் பற்றியும் கலை இலக்கியத்தொண்டு பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது .முற்கால முத்தரையரது ஆட்சியின் முடிவிற்கும் பிற்கால முத்தரையர் ஆட்சியின் தொடக்கத்திற்கும் இடையில் ஒரு கால இடைவெளி இருந்ததாக தெரிகிறது.

முத்தரையர்கள் கி .பி எட்டாம் நூற்றாண்டின் இடையில் இருந்து கி .பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உள்ள ஒண்ணரை நூற்றாண்டுகள் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

முத்தரையர்கள் பாண்டியர்களின் மீது வெற்றிகொண்டதின் நினைவாக மாறன் ,தென்னவன் ,என்னும் விருதுகளை பெற்றனர் .மேலும் விடேல் விடுகு ,மாற்பிடுகு,பெரும்பிடுகு முதலான பட்டங்களை பற்று சிறப்புற்றனர்..

விடேல் விடுகு விழுப்பேரதி அரைசன் என்ற சாத்தன் மாறன் இம்மரபின் முதல் தலைவனாக தோன்றுகிறது இவனுடைய தாயின் பெயர் பெரும்பிடுகு பெருந்தேவி என்பாதாகும் சாத்தன் மாறன் என்ற பெயரின் முதற் பகுதி இவனுடைய தந்தை சாத்தன் என்ற பெயரை குறிக்கின்றதாக கொள்ளலாம் .

செந்தலை தூண் கல்வெட்டில் இம்மரபின் மூன்று அரசர்களின் பெயர்கள் காணபடுகின்றன .இவற்றுள் முதலாமவனாக பெரும்பிடுகு முத்த்ரையனான குவாவன் மாறன் குறிக்கபெருகின்றான்.குவாவன் என்பது இவனுடைய பாட்டன் பெயராகவும் கொள்ளலாம் .மாறன் பரமேஸ்வரன் அவனுடைய மகன் சுவரன் மாறனும் ஐந்தாவது ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர்களாக கொள்ளலாம்.

எழுத்தமைதியை கொண்டு கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொரிக்கபெற்றதாக கருதப்படும் கல்வெட்டு ஒன்றை கொண்டு சாத்தன் என்பான் சுயேட்சையாக ஆட்சி புரிந்தவனாக கருதலாம் .(சான்று -பல்லவமன்னன் நந்தி வர்மன் மற்றும் நிருபதுங்க வர்மனுடைய ஆட்சி கால கல்வெட்டுக்கள் ).

சாத்தன்

பிற்கால முத்தரைய மன்னருள் சாத்தன் என்பானே முதல் அரசன் என்று கருத பெறுகிறான் .பெரும்பிடுகு பெருந்தேவி என்பார் இவனது தேவியார் ஆவார் .பெரும்பிடுகு என்னும் பல்லவ மன்னவர்களுடைய விருதிலிருந்து இவள் பல்லவ குல இளவரசி என்று கருதலாம் .முது வணிகத்தில் தனிப்புகழ் பெற்று விளங்கியமையால் இவ்வரசன் சாத்தன் என்று அழைக்கப்பெற்று இருக்ககூடம் .புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் விட்டுணு குகை கோயில் பெரும்பிடுகு பெருந்தேவியின் காலத்தில் அமைக்கப்பட்டது .முத்தரையரது கோயில்களுள் இதுவே பழைமை மிக்கதாகும்.

saaaththan maaran-II

சாத்தனை அடுத்து அவனது மகன் சாத்தன் மாறன் என்பான் அரியணை ஏறினான் .இவனக்கு விடேல் விடுகு விழுபேரதிரையன் என்ற விருது பெயரும் உண்டு .கல்வெட்டு அறிஞர் கே.ஜி .கிருஷ்ணன் அவர்கள் இவ்வேந்தன் கி.பி .8 ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாம் ராசசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவன் ,இவ்வேந்தனை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு திருமையத்தில் உள்ள மெய் பெருமாள் கோயிலில் காணப்பெறுகிறது.

-மாறன் குவாவன்-III

சாத்தன் மாறனை அடுத்து அவனது மகன் மாறன் குவாவன் மணி முடி சூடி கொண்டான் .இவ்வேந்தனை பற்றி பொன்விளைந்தான் பட்டி இரண்டாம் நந்தி வர்மன் கல்வெட்டு ஒன்று "ஸ்வஸ்தி ஸ்ரீ நந்திபன் மற்குயாண்டுகு முத்தரையன் குவாவன் மனவாட்டிய்" என்று குறிபிடுகிறது.

இவனது மனைவி சமண பள்ளிக்கு பொற்காசுகளை கொடையாக அளித்திருக்கிறாள் என்பது கல்வெட்டின் மூலம் தெரிகிறது ,இம்மன்னனின் மகன் குவானின் மாறன் பற்றிய கல்வெட்டுகள் தஞ்சை மாவட்ட செந்தலையிலும்,மற்றொரு மகனாகிய குவாவன் சாத்தனின் கல்வெட்டு மலையடிபட்டியிலும் கிடைத்திருப்பதால் இவ்விரு பட்குதியிலும் ஒரு பெரும்பகுதி இம்மன்னன் ஆண்டிருக்கிறான் .

அறிமுகம்

பழந்தமிழ் குடியினரான முத்தரையரது வரையா வன்மை ,"பெருமுத்தரையர் பெரிது வந்தீயும் கருணைச் சோறு ,என்று பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரில் பெரிதும் புகழப்பட்டுள்ளது .

பெரும்பிடுகு முத்தரையன் -I

முத்தரைய இனத்தின் நான்காவது மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் -1எனப்படும் குவாவன்மாறன் நார்த்தாமலையில் விசயலாய சோழிசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துள்ளான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவாரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதபெற்றுள்ளது .அக்கல்வெட்டின் சரியான வாசகம் ,

"சாத்தன் பூதியான இலங்கோவதியரையரை எடுப்பித்த கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின தேனவன் தமிழ் அதியரையன் புதுக்கு "

நியமம் பிடாரி அம்மன் கோயில்

முத்தரையர் அரசர்களில் சக்கரவர்த்தியாக திகழ்ந்த பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் இவர் பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்ம வர்மன் சோழ மன்னர்களுள் முதலாம் முதலாம் ராசராசனக்கும் பாண்டியர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் ஒப்பானவன் இவன்தான் நியமத்தில் பிடாரி கோயிலை நிறுவினான் இது செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் .செந்தலை கல்வெட்டுகளில் "சுவரன் மாறன்னானவன் எடுபித்த பிடாரிகோயில் அவநெரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இத்தூண்கள் மேலுழுதின இவை "என அக்கல்வெட்டு கூற்கின்றது

பெரும்பிடுகு முத்தரையன்

மாறன் குவாவனை அடுத்து குவாவன்மாறன் ஆட்ச்சிக்கு வந்தான் .பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பட்டப்பெய்ரினை பூண்டிருந்தான் .இவன் இரண்டாம் நந்திவர்மப் பல்லவனக்கும் முதலாம் ராசா சிம்ம பாண்டியனுக்கும் உடன் காலத்திணன் ஆவான் ,இவனது பெயரிலுள்ள குவாவன் இவனுடிய தந்தையை குறிப்பதாகவும் மாறன் என்னும் பெயர் இவனது பாட்டனை குறிப்பதாகவும் கொள்ளலாம் .

இளங்கோயதி அரையன் மாறன் பரமேஸ்வரன் ;- குவாவன் மாறன் மைந்தனான மாறன் பரமேஸ்வரன் தன் தகப்பனுக்கு பிறகு மன்னன் ஆனான் .செந்தலை கல்வெட்டு இவ்வேந்தனை குவாவன் மாறனவன் மகன் இலங்கோயதிரைய னாயின் மாறன் பரமேசுரன் என்று குறிப்பிடுகின்றது .இரண்டாம் நந்திவர்மப் பல்லவனுடைய "பரமேசுவரன் " என்னும் விருது பெயரினை மேற்கொண்டான் என்பது புலனாகும் .முதரேய் மன்னர் களுக்குள் பெரும் புகழ் பெற்ற பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்றவனை ஈன்றெடுத்த பெருமையும் புகழும் இம்ம்மன்னனை சார்ந்ததாகும் .

பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் ;- இம்மன்னனைப் ப ற்றிய செய்திகள் செந்தலை கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளன .இவை அனைத்தும் பாவடிவிலேயே அமைந்துள்ளன .இவற்றுள் சில சிதைந்துள்ளன ."வீரத்தின் உளைக்களனாக ,வெற்றியின் நிலைக்களனாக வாழ்ந்த இவ்வற்றால் மறவன் களம் பல கண்டு வெற்றி பல கொண்டு போரில் பெரும் பங்கு வகித்தான் " என இராச சேகர தங்கமணி கூறுவார் .

சுவரன் மாறனுடைய செந்தலை கல்வெட்டில் சுவரன் மாறன் பாண்டியர்கள் மீதும் சேரநாட்டு அரசன் மீதும் கீழ்கண்ட இடங்களில் வெற்றி பெற்றான் எனகூறபட்டுள்ளது ,அவ்விடங்களாவன கொடும்பாளூர் ,மணலூர் ,திங்களூர் ,காந்தளூர் ,அழுந்தியூர் ,காரை மரங்கூர் ,அண்ணல்வாயல் ,செம்பொன்மாரி ,தஞ்சை ,செம்புல நாட்டு வென்கோடல் ,புகலி ,கண்ணனூர் முதலியன ,இவ்விடங்களில் எல்லாம் தஞ்சை ,புதுகோட்டை ,திருச்சி ,ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் உள்ளன .செந்தலை கல்வெட்டு சுவரன் மாறனால் ஆதரிக்கப் பெற்ற கவிஞர்களால் ஆக்கபெற்ற மெய்கீர்த்திகள் என்று கொண்டாலும் அவைகள் முற்றிலும் வரலாற்று உண்மைகள் .

சுவரன் மாறன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்தி வரமனுடைய படை தலைவனுடன் சேர்ந்து மேற் கூரபெற்ற இடங்களில் வேடர்களை பெற்று பல்லவ பேரரசை நிலை பெற செய்தான் எனக்கூறலாம் .

செந்தலைதூண் கல்வெட்டு

செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் முன் மண்டபத்தில் காணப்பெறும் நான்கு தூண்களின் அடிப்பாகங்கள் சிதைந்து காணப்பெறுகின்றன ,அவைகள் சிதையாமல் இருந்திருந்தால் 27 வெண்பாக்கள் நமக்கு கிடைத்திருக்கும் ,இந்த நான்கு தூண்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் ,சுவரன் மாறன் நியமத்தில் பிடாரி கோயில் ஒன்று எடுபித்த செய்தியை தெரிவிக்கின்றன ,மற்றும் தான் வெற்றிகொண்ட ஊர்களின் பெயர்களையும் கல்லில் வெட்டும்படி ஆனையி ட்டுல்லான் .அதனை சுவரன் மாறானவன் எடுபித்த பிடாரி கோயில் அவனேரிந்த ஊர்களும் அவன் பேர்களும் அவனை பாடினர் பேர்களும் இதூங்கன் மேலேழுதின இவை " என அக்கல்வெட்டு கூறுகிறது இக்கல்வெட்டுகளில் சுவரன் மாறன் கீழ்கண்ட பட்டங்களை மேற்கொண்டுள்ளான் .

(1 ) சிரீசத்துரு மன்னன் (2 )சிறீ கள்வர் கள்வன் (3 ) சிறீ அதிகாசன் .மேலும் பத்து பட்ட பெயர்களையும் அக்கல்வேட்டுக்கள் குறிப்பிடுகின்றன .அவையாவன சிறீ மாறன் ,அபிமான தீரன் ,சத்துரு கேசரி ,தமராளன் ,செருமாரன் வேலு மாறன் ,சாத்தன் மாறன் ,தஞ்சை கோன்,வல்லக்கோன்,வான்மாரன் முதலியனவாகும் .சுவரன் மாறனை பற்றி மூன்று தமிழ் புலவர் பாடியுள்ளதாக அவனிடைய கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம் .

 • திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசில் வேல் நம்பி
 • கோட்டாற்று இளம் பெருமானார்
 • கிழார்க் கூற்றத்துப் பவதாயமங்கல்த்து குவாவன் காஞ்சன்

மேற் கூறப்பெற்ற விருது பெயர்களையும் ,சுவரன் மாறனை பற்றிப் பாடிய புலவர்களையும் ஆதாரமாக கொண்டு இகுறுநில மன்னர் ஒரு பெரும் பேரரசனாகத் திகழ்ந்தான் என்று நடன காசிநாதன் கூறுகிறார் ."முத்தரைய அரசர்களுள் இவன் பெரும் பேரரசனகத் திகழந்தவன் என்று கூறலாம் ,பல்லவ மன்னர்களுள் முதலாம் நரசிம்மவர்மனுக்கும் ,சோழ மன்னர்களுள் முதலாம் ராசராசனுக்கும் பாண்டிய மன்னர்களுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கும் இவனை ஒப்பிடலாம் .தமிழ் புலவர்களை ஆதரித்து தனது வெற்றிகளை குறிக்கும் செய்திகளை வெண்பாக்களில் எழுதி பொரிக்க செய்த செய்கையால் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் அனைவரையும் இவன் விஞ்சி நிற்கிறான் ".

மரபு பட்டியலில்

மரபு பட்டியலில் காணப்பெறும் நான்காவது மன்னனாகிய பெரும்பிடுகு முத்தரையன் -1 குவாவன் மாறன் செந்தலை பகுதியை ஆண்டு வருகையில் குவாவன் மாறனின் தம்பியான குவாவன் சாத்தனின் தலைமையில் ,இளைய பரம்பரை திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,மலையடி பட்டியில் ஆண்டு வந்தனர் ,அவர்களுள் குவாவன் சாத்தனின் முதல் மகனக்கு சாத்தன் பூதி,என்ற பெயர் வழங்கியது .இவனக்கு விடேல் விடுகு இலங்கோவதிரையன் என்ற பட்டபெயர் இருந்தது .இக்குறுநில மன்னன் இளைய தலைமுறையில் முதல்வனாக கருதப் பெறுகிறான் .நார்த்தமலையில் விசயாலய சோழீசுவரம் என்று வழங்கும் சிவன் கோயிலை எடுபித்துல்லான் .இச்செய்தி இக்கோயிலில் காணப்பெறும் துவரபாலகச் சிற்பத்தின் பீடத்தில் எழுதப்பெற்றுள்ளது .அக்கல்வெட்டின் சரியான வாசகம்

"சாத்தன் பூதியான இலங்கோவதியரையர் எடுப்பித்த கற்றளி மழை இடித்தழிய மல்லன் வந்துமன் ஆயின தென்னவன் தமிழ் அதியரையன் புதுக்கு "

என்பதாகும் ,ஆகவே விசயாலய சோழிசுவரம் என்ற கற்றளி விசயாலய சோழனால் சோழீசுவரம் அமைக்கபெற்றதன்று .சாதன்பூபதி என்ற முத்தரைய மன்னனால் அமைக்கப்பெற்று மல்லன் விதுமன் என்பவனால் புதுபிக்கபெற்றது .பிற்காலத்தில் விசயாலய சோழீசுவரம் எனபெயர்பெற்றது .சாதன்பூதிக்கு பூதி அரிந்திகை என்னும் மகள் ஒருத்தி இருந்தால் ,தென்னாற்காடு மாவட்டம் திரு கோயிலூர் வீரட்டனேசுவரர் கோயிலில் காணப்பெறும் மூன்றாம் மூன்றாம் நந்திவர்மன் காலத்திய கல்வெட்டு ப்போதி அரிந்திகை அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்த செய்தியை கூறுகிறது .சாத்தன் பூதிக்கு சாத்தன் காளி என்ற பெயருடைய உடன்பிறந்தாள் ஒருத்தி இருந்தாள் ,இதனை திருகாட்டு பள்ளி அகினீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று 'நியமத்து ஆயிரத்தளி மகதேவர்க்கு விடேல் விடுகு முத்தரையன் மகளான சாத்தன் காளி ' என்று குறிபிடுகிறது .இம்மங்கை நியமத்து ஆயிரத்தளி இறைவர்க்கு நந்தா விளக்கு வைப்பதற்கு பதின் கழஞ்சு பொன் வைத்ததாகவும் அறிகிறோம் .

சாத்தன் பழியிலி - விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தனுடைய இராண்டாவது மகனவான் .இவன் புதுகோட்டை மாவட்டம் நார்தமலையில் குடைவரை கோயில் ஒன்றை அமைத்துள்ளான் .இதனை நிற்பதுங்கவர்மா பல்லவனின் ஏழாம் ஆண்டில் வரையபெற்ற நார்த்தாமலை கல்வெட்டால் அறிய முடிகிறது .இக்கோயில் "சாத்தான் பழியலிச்சுவரம் என்று அழைக்கப்பட்டது .சாத்தன் பழியிலியின் கல்வெட்டு இதுகாறும் ஒன்றும் கிடைக்கவில்லை .இக்கல்வேட்டிலும் கூட சாத்தன் பழியிலி பல்லவர்களின் விருதுபெயர்களை மேற்கொண்டதாகத் தெரியவில்லை .எனிவே சாத்தன் பழிய்லி நிருபதுங்க பள்ளவனக்கு அடங்கி ஆட்சி செய்ததாக கூறமுடியாது பல்லவவரின் மேலாண்மையை விடுத்து தனிதாண்ட மன்னனாக கருதலாம்

சாத்தன் பழிலிக்குப் பழியிலி சிறியநங்கை என்னும் பெயரில் மகள் ஒருத்தி இருந்தாள் ,இம்மங்கை நல்லாள் ,மீனவன் தமிழ்திரையனான மல்லன் ஆனந்தனக்கு மணமுடிக்கபெற்றாள் .இவ்விருவருக்கும் அனந்தன் பழியிலி என்ற மகனோ மகளோ இருந்ததாக தெரிகிறது .தனது தந்தை சாத்தன் பழியிலியால் அமைக்கப்பெற்ற நார்த்தாமலை குடைவரை கோயிலின் முகமண்டபத்தினை பழியிலி சிறிய நங்கை அமைத்துள்ளான் .இதனை நார்த்தாமலை மேல்மலை குன்றில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலின் முன்மண்டபத்து வடக்குச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றினால் அறிய முடிகிறது .

தனது ஆட்சியின் தொடக்க காலத்தில் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்த சாத்தன் பழயிலி தனது வலிமையை பெருக்கி முத்தரையரின் தனியாட்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது .தஞ்சையை விசயாலயன் வெற்றிகொண்டபின் முத்தரையர்கள் புதுகோட்டைப் பகுதிக்கு சென்று இருக்கவேண்டும் சாத்தன் பழிலியின் இறுதி காலத்தில் முத்தரையர் வீழுசியுற்றனர் எனக்கூறலாம் .பல்லவ வேந்தன் நிருபதுங்கவர்மனும் ச்சீரிவள்ளபனும் சாத்தன் பழிலியின் உடன் காலத்தவர் ஆவர் .சாத்தன் பழியிலி ஏறத்தாழ கி.பி 830 முதல் 860வரை ஆட்சி புரிந்துள்ளார் .

அமரீன்ரி முத்தரையன்

பூதி களரி ,சாத்தன் பூதியின் மகனாவான் ,இவனக்கு அமரீன்ரி முத்தரையன் என்ற பட்டப்பெயரும் இருந்தது ,சாத்தன் பூதியும் ,பூதி களரியும் ஒருவரே என்ற கருத்து பொருத்தம் உடையதன்று என்று ராசசேகர தங்கமணி கூறுவர்.பூதிகளறி பல்லவ வேந்தன் நிருபதுங்க வர்மன் காலத்தவன் ஆவான் .இந்த முத்தரைய தலைவனை பற்றி அறிந்து கொள்வதருக்கு பல கல்வெட்டுகள் துணை செய்கின்றன .இவற்றுள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருசின்னம்பூண்டி ,செந்தலை,திருச்சோற்றுத்துறை ,திருகோடிகாவல் முதலிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் முக்கியமானவியாகும் .இவற்றை ஆராயிந்து பார்த்தால் பூதி களரி பல்லவ மேலான்மைலிருந்து விடுதலைபெற்ற வேந்தனாக புதுக்கோட்டைப் பகுதியில் ஆட்சி புரிந்தான் என்பது விளங்குகிறது .கலையார்வம் மிக்க இவ்வேந்தன் புதுகோட்டை மாவட்டம் பூவாளைகுடியில் புட்பவனேசுவரர் குடைவரை கோயிலிலை குடைவிக்க செய்தான் என்பது விளங்குகிறது .

தென்னவன் இளங்கோ முத்தரையன் ;- முத்தரைய தலைவருள் புக்ழ்பெற்றவனாகிய தென்னவன் இளங்கோ முத்தரையன் பல்லவ பாண்டியர்க்கு அடங்காமல் தனிதாண்ட மன்னன் ,இரண்டாம் பெரும்பிடுகு முதரையனான சுவரன் மாறனே இளங்கோ முத்தரையன் எனச் சிலர் கருதுகின்றனர் .பெரும்பிடுகு முதரையனின் பட்டபெயர் பலவற்றுள் இளங்கோ முத்தரையன் ஏன்னு பெயர் இடம் பெற்றமையாலும் ,பெரும்பிடுகு முத்தரையன் பல்லவருக்கு அடங்கிய மன்னனாகவே தெரிவதால் இக்கருத்து பொருத்தமாக தோன்றவில்லை ,அடுத்து பெரும்பிடுகு முத்தரையன் (சுவரன் மாறன் )நியமத்தில் அமைத்த பிடாரி கோயிலுக்கு இளங்கோ முத்தரையன் தானம் அளித்துள்ள செய்தி செந்தலை கல்வெட்டால் அறியபடுகிறது .இதில் இளங்கோ முத்தரையன் இக்கோயிலை கட்டியதாக கூறபடாமையால் ,பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறனும் ,இளங்கோ முத்தரையனும் ஒருவனாக இருக்க முடியாது என திரு ,கோவிந்த சாமீ கருதுவர் .

விடேல்விடுகு முத்தரையனான குவாவன் சாத்தனே இளங்கோ முத்தரையன் ஆவான் என்று கூறுகிறார் ,இதனை உறுதி படுத்த இவனது 13ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம் பூண்டியிலும் திருகொடிக் காவலிலும் புதுக்கோட்டை கீரனுரிலும் கிடைத்துள்ளன .இவனுடைய 17 ,18 -ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் திருகோடிக்காவலிலும் ,செதந்தலையிலும் கிடைத்துள்ளன .

இத்தலைவனது திருசின்னபூண்டி கல்வெட்டில் எயில் நாட்டு அட்டுபள்ளி அரிஞ்சிகைபுரம் என்ற தொடர் காணப்பெறுகிறது .இம்மண்ணின் ஆட்சிகாலம் ஆதித்த சோழனுக்கும் முதலாம் பராந்தக சோழனுக்கும் இடைப்பட்ட காலத்தில் கி.பி 880 முதல் 900 ஆண்டு வரையில் இவரது ஆட்சி காலம் .

இளங்கோ முத்தரையனுக்கு உத்தமானி என்னும் பட்டபெயர் வழங்கி வந்தது .இதனை தஞ்சை மாவட்டம் திருசோற்றுத்துரையில் கோயில் காணப்பெறும் ஒரு கல்வேட்டைகொகொண்டு உணரலாம்

திருசோற்றுத்துரைக் கோயில்

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம் என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான பெயர் இளங்கோ முத்தரையனின் பட்டபெயரான உத்தமதானி என்பதுடன் தொடர்புடையதாகும் ,தென்னவன் இளங்கோவேள் என்னும் பெயர் கொடும்பாளுர்த் தலைவன் பூதவிக்ரம் கேசரியின் விருது பெயரை நமக்கு நினைவுட்டுகிறது.இத்தலைவன் கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவனுக்குப் பூதி அரிந்தகைக்கும் பிறந்தவனாக தெரிகிறது .கீரனூர் கீழ்தானியம் ஆகிய ஊர்களில் உத்தம தானிசுவரர் கோயில் இத்தலைவனால் அமைக்கப்பெற்றதாகும் .

அனந்தன் பழியிலி ;- அனந்தன் பழியிலி என்பான் சாத்தன் பழிலியின் மகளான பழியிலி சிறிய நங்கைக்கும் மீனவன் தமிழ் திரையனான மல்லன் ஆனந்தனுக்கும் மகனவான் .

இதுகாறும் கூறியவற்றால் மரகுடியனராகிய முத்தரையர் பல்லவ பாண்டிய போராட்டத்தில் இருபக்கமும் நின்று போராடியும் தனித்தும் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது நிருபணமாகிறது .

முத்தரையர்கள் இன்று தமிழகம் ,ஆந்திரம் ,கருநாடகம் முதலிய மாநிலங்களில் முத்துராஜா ,முத்திரியர் ,அம்பலகாரகள் ,முத்திரிய நாயுடுகள் என்னும் பல பெயர்களில் வாழுந்து வருகின்றனர் .

அரசர்களும் காலங்களும்

 • பொன்மாந்தனார் --- கி.பி 630 -637
 • வாணகோ முத்தரையர் --637 ---642
 • மாந்த பருமர் --- 642 -664
 • குவாவன் மாறன் @ பெரும்பிடுகு முத்தரையன் --- 655 --680
 • மாறன் பரமேஸ்வரன் --680 --705
 • சுவரன் மாறன் @ இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் ---- 705 -745
 • காடவ முத்தரையன் @ சாத்தன் மாறன் -- 745 -770
 • விடேல் விடுகு மார்பிடுகு முத்தரையன் -- 770 --791
 • குவணன் சாத்தன் @ விடேல்விடுகு முத்தரையன் -791 --826
 • சாத்தன் பழியிலி -- 826 -- 851
 • அனந்தன் பழியிலி 851 --860

முத்தரையர் என்ற பெயர் வரக்காரணம்

முத்தரையர்கள் சேர ,சோழ, பாண்டியர்கள் ஆண்ட மூன்று தரைகளையும் முத்தரைய மன்னர்கள் ஆட்சி புரிந்ததால் (முத் +தரை )முத்தரையர்கள் என்று அழைக்கப் பெறுகிறார்கள்.என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.