இன தலைவர்கள்

அய்யா R . விஸ்வநாதன்

முத்தரைய மக்களால் அன்புடனும் பாசத்தோடும் அய்யா என்றும் ,ஆர்,வி என்றும் அழைக்கப்படும் திரு ,ஆர் ,விஸ்வநாதன் ,அவர்கள் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் ,மற்றும் ,சிங்கதமிழர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ,கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது முத்தரையர் இன நவீன வரலாற்றில் ஒரு சாதனை ,திரைப்பட உலகிலும் கோலோச்சி கொண்டிருக்கும் பரதன் பில்மஸ் உரிமையாளர் ,திரை பட நடிகர் திரு ஆர்.வி ,பரதன் இவரது புதல்வர் ,திருச்சி வரகனேரி இவரது சொந்த ஊர்.

திரு R .V . பரதன்

வருங்கால முத்தரைய இன நம்பிக்கை ,இளம் தலைவர் தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி கொண்டிருக்கிறார் ,சமிபத்தில் கூட முல்லை பெரியார் மற்றும் முத்தரையர் இனத்திற்கான தனி இட ஒதிக்கீடு குறித்து பிரமாண்ட உண்ணாவிரத போராட்டம் நடத்தியது பாராட்ட கூடியது ,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுகோட்டை சட்டமன்ற தேர்தலில் சிங்கதமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக களம்கண்டார்,முத்தரையர் இனத்தின் ஒரே திரைப்பட கதாநாயகர் ,வளரும் நட்சத்திரம் ,முத்தரைய இன இளைஞர்களிடேயே பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருபவர் ,திரு ஆர்.வி ,பரதன் ,முத்தரைய இன தலைவர் அய்யா ஆர் ,வி அவர்களின் இளைய புதல்வர் .

திரு. ஆண்டியப்பன் அவர்கள்

1990 களில் முத்தரையர் சங்க வளர்ச்சியில் அரும்பாடு பட்டவர் புதுகோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்து ஆந்திர எல்லை வரை வந்து சங்க உணர்வை வளர்த்தவர் ,வேலூர் மாவட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது நிறைய இளைஞர்களுக்கு இவர்தான் முதல் சங்க தலைவராக தெரியும் ,தமிழகம் முழுவதம் முத்தரையர் சங்கத்தை கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும்.

திரு குழ. செல்லையா

திரு ,குழ, செல்லையா ,முன்னாள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ,தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் ,மறைந்த முதல்வர் திரு ,எம் ஜி ,இராமச்சந்திரன் ,அவர்களின் நெருங்கிய நண்பர் அதிமுகவின் ஆரம்ப கால தலைவர்களுள் ஒருவர். முத்தரையர் சங்க தலைவராக செயலாற்றியவர். இவரின் செயல்பாடு பாராட்ட பட வேண்டிய அரிய பணி .

திரு ராஜமாணிக்கம்

திரு ,ராஜமாணிக்கம் ,தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருபது வருடங்களுக்கும் மேலாக செயல் பட்டு கொண்டிருக்கிறார் ,ஒரிங்கினைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர் ,இனத்திற்கென்று பல்வேறு ஊர்களில் திருமண மண்டபங்கள் மற்றும் கட்டிடங்களை கட்டியுள்ளது இவரின் சிறப்பு ,பல்வேறு கட்சி தலைவர்களுடன் இனைந்து செயல் படுபவர்,தமிழக முதல்வருக்கு நன்கு அறிமுகமானவர் நம்ம மக்கள் கட்சி நிறுவனர் .வேலூர் மாவட்டத்தில் இக்கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் கலம்கண்டனர்..